உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

வீரபாண்டி, நவ. 10-சேலம், உத்தமசோழபுரம், சூளைமேடு பெரிய மாரியம்மன் கோவிலில் ஐப்பசி பொங்கல் திருவிழா, கடந்த அக்., 24ல் கம்பம் நடுதல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று பொங்கல் வைபவம் நடந்தது. மூலவர் பெரிய மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து சர்வ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.ஏராளமான பக்தர்கள், மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் மாவிளக்கு, அக்னி கரகம், பூங்கரகம், பொய்க்கால் குதிரை நடனத்துடன் ஊர்வலம் நடந்தது. இரவு சத்தாபரண ஊர்வலத்தில் அம்மன் குதிரை வாகனத்தில் முக்கிய வீதிகளில் உலா வந்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சோழமாதேவி, அறங்காவலர் தலைவர் முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி