உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோரிக்கை அட்டை அணிந்து அஞ்சல் ஊழியர்கள் பணி

கோரிக்கை அட்டை அணிந்து அஞ்சல் ஊழியர்கள் பணி

ஈரோடு, அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணி செய்தனர்.அஞ்சல் துறையில் தேசிய அளவில், 'ஏ.பி.டி-2.0' என்ற சாப்ட்வேரை புகுத்தி, அனைத்து அஞ்சலகங்களுடனும் இணைத்துள்ளனர். பெரும்பாலான அஞ்சலகங்களில் உள்ள கணினிகள், மிகவும் பழையவை. புதிய மென்பொருளை ஏற்கும் திறன் இல்லை. அல்லது சர்வருடன் இணைந்து செயல்பட இயலாமல் உள்ளன. இதனால் கடந்த, 4 முதல் அஞ்சலகங்களில் பதிவுத்தபால், ஸ்பீடு போஸ்ட், பணம் செலுத்துதல், பெறுதல் உட்பட பல்வேறு பணிகள் தடைபட்டும், விரைவாக செயல்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.மேலும் மக்களுக்கு தரமான சேவை வழங்க, கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாப்ட்வேர், சர்வர் பிரச்னையால் ஏற்படுத்தும் தாமதத்துக்காக, பணியாளர்களை இரவு வெகுநேரம் காத்திருக்க வைத்து அனுப்பக்கூடாது என்பது போன்ற கோரிக்கையை வலியுறுத்தினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களில், 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி