உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பயன்பாட்டுக்கு வந்தது சிறை பங்க்

பயன்பாட்டுக்கு வந்தது சிறை பங்க்

சேலம், சேலம் மத்திய சிறையில், கைதிகளின் மன உளைச்சலை போக்க, அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு, பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுன்றனர். அதன் ஒரு பகுதியாக, பெட்ரோல் பங்க் நிறுவும் பணி முடிந்து, பொது பயன்பாட்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. காலை, 10:30 மணிக்கு, சிறை எஸ்.பி., வினோத்குமார், முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.இதுகுறித்து, சிறை அதிகாரிகள் கூறியதாவது:பங்க் பணிக்கு தண்டனை கைதிகளில், நன்னடத்தை பட்டியலில் இடம்பெற்ற, 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. காலை, மாலை தலா, 9 பேர், இரவு பணியில், 2 பேர் என, சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுகின்றனர். உதவி சிறை அலுவலர் தலைமையில், 9 வார்டன், 20 சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, பங்க் செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது. ஏற்கனவே, புழல், திருச்சி, கோவையில் தலா, 2 பங்க், மதுரை, பாளையங்கோட்டை, வேலுார், புதுக்கோட்டையில் தலா ஒன்று என, 10 பங்க், சிறைத்துறை நிர்வாகத்தில் உள்ள நிலையில், சேலத்துடன் சேர்த்து அதன் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ