உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஷட்டரை தாங்கும் கல்துாண்கள்; வலிமை குறித்து பேராசிரியர் ஆய்வு

ஷட்டரை தாங்கும் கல்துாண்கள்; வலிமை குறித்து பேராசிரியர் ஆய்வு

மேட்டூர் : மேட்டூர் அணை, 1925ல் தொடங்கி, 1934ல் கட்டி முடிக்கப்பட்டது. அணை நிரம்பினால், இடதுகரையில் உள்ள, 16 கண் மதகு வழியே உபரிநீர் வெளியேற்றப்படும். அதற்கு மதகில், கல்துாண்கள் இடையே தலா, 20 அடி உயரம், 60 அடி நீளம், 52.25 டன்னில் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அணை கட்டி, 90 ஆண்டுகளானதால், 16 கண் மதகில் ஷட்டர்களை தாங்கி நிற்கும் கல்துாண்கள் வலுவாக உள்ளதா என, நேற்று காலை, 10:00 மணிக்கு சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் அழகுசுந்தரமூர்த்தி ஆய்வு செய்தார். இதுகுறித்த அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வைப்பார். அதன்படி, கல்துாண்களை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். அணை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், மேற்பார்வை பொறியாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி