மேலும் செய்திகள்
கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்
14-Dec-2024
சேலம்: மார்கழியையொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், சேலம் பிரதோஷ வழிபாடு நண்பர் குழு சார்பில், 3ம் ஆண்டாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிகாலையில் சுகவ-னேஸ்வரருக்கு இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்-வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, 108 லிட்டர் பாலால் அபி ேஷகம் செய்து பட்-டாடை உடுத்தி பல்வேறு வாசனை மலர்களால் அலங்காரம் செய்-யப்பட்டது.இதையடுத்து, 1,500 கிலோ வண்ண வாசனை மலர்கள், சீர்வ-ரிசை தட்டுகளுடன், அம்மையப்பர், யானை வாகனத்தில் அமர்த்-தப்பட்டு, திரளான பக்தர்கள், ராஜகணபதி கோவிலில் இருந்து சின்னக்கடை வீதி வழியே ஊர்வலமாக சுகவனேஸ்வரர் கோவிலை அடைந்தனர். அங்கு சிவாச்சாரியார், வேதங்கள் முழங்க, சுகவனேஸ்வரருக்கு புஷ்பாஞ்சலி வைபவம் நடத்தி, அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்-னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை குழுவின் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
14-Dec-2024