உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுகவனேஸ்வரருக்கு 1 டன் பூக்களால் புஷ்பாஞ்சலி

சுகவனேஸ்வரருக்கு 1 டன் பூக்களால் புஷ்பாஞ்சலி

சேலம்: சேலம், வ.உ.சி., பூ மார்க்கெட் பிரதோஷ வழிபாடு நண்பர் குழு சார்பில், 2ம் ஆண்டு புஷ்பாஞ்சலி விழா, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது. இதில் அனைத்து ஜீவ ராசிகளும் நலம் பெற வேண்டி, காலை, 6:00 மணிக்கு, சுகவனேஸ்வரருக்கு, 101 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேர்வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில் இருந்து ஒரு டன் பூக்கள், சீர்வரிசை தட்டுகளுடன், குழுவினர் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது ரிஷப வாகனத்தில் பார்வதியுடன் ராஜ அலங்காரத்தில் சிவன் காட்சியளித்தார். பின் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு குழுவினர் வந்தனர். அங்கு பூக்களால் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி