உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீரேற்று நிலையத்தை சூழ்ந்த மழைநீர் குடிநீரின்றி மக்கள் அவதி

நீரேற்று நிலையத்தை சூழ்ந்த மழைநீர் குடிநீரின்றி மக்கள் அவதி

இடைப்பாடி: சேலம் மாவட்டத்தில் இரு வாரங்களாக பெய்த மழையாலும், சர-பங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும், கொங்கணா-புரம் ஒன்றிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி-யுள்ளன.அதேபோல் கொங்கணாபுரம் ஒன்றியம், அரசங்குட்டை ஏரி நிரம்-பியதால், அதன் கரையோரம் இருந்த நீரேற்று நிலையத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளது.இந்த நிலையம், கோணசமுத்திரம் ஊராட்சிக்கு குடிநீர் வழங்க, 17 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதன்மூலம், 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் வழங்கப்பட்-டது. ஆனால் தற்போது தண்ணீர் சூழ்ந்ததால், 5 நாட்களாக ஊராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர். மேலும் ஏரி நிரம்-பியதால் கரையை ஒட்டி இருந்த விவசாய நிலங்களும் மூழ்க, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை