இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பேரணி
ஆத்துார், ஆத்துாரில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், 18வது சேலம் மாவட்ட மாநாடு மற்றும் பேரணி நேற்று நடந்தது. ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் இருந்து துவங்கிய பேரணி, உடையார்பாளையம் வழியாக ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்டை வந்தடைந்தது. தொடர்ந்து, ஆத்துார் காமராஜர் சாலையில் உள்ள மண்டபத்தில் மாநாடு நடந்தது. மாநில துணைத் தலைவர் பழனி துவக்கி வைத்து பேசினார். ஜனநாயக வாலிபர் சங்க செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மாநில செயற்குழு அர்ஜூன், மாநில பொருளாளர் பாரதி, மாவட்ட செயலர் பெரியசாமி, மாவட்ட நிர்வாகிகள் தர்மலிங்கம், கணேசன், மனோகரன், வெற்றிவேல், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.