உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரேஷன் கடை கட்டும் பணி தொடக்கம்

ரேஷன் கடை கட்டும் பணி தொடக்கம்

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்சி அரசமரத்தடியில் உள்ள ரேஷன் கடையில், 1,400க்கும் மேற்பட்ட கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில நேரங்களில் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.இதனால் கடையை இரண்டாக பிரிக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஏலக்கரடு அருகே பனங்காட்டில், 13.50 லட்சம் ரூபாயில், புது ரேஷன் கடை கட்ட, ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் பூமி பூஜை போட்டு, கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலர் உமாசங்கர், ஊராட்சி செயலர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை