உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டாக்பியா போராட்டம் பிசுபிசுப்பு சம்பளம் பிடிக்க பதிவாளர் உத்தரவு

டாக்பியா போராட்டம் பிசுபிசுப்பு சம்பளம் பிடிக்க பதிவாளர் உத்தரவு

சேலம், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்(டாக்பியா) சங்கம் சார்பில், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 6ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், மாநிலம் முழுதும் நடந்தது. சேலம் மாவட்ட கிளை சார்பில், அச்சங்கத்தினர் சிறு விடுப்பு எடுத்து, சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்றும், வேலை நிறுத்த போராட்டத்தை தொடந்தனர். ஆனால் சேலம் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.குறிப்பாக தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர் அசோசியேஷன்(பேக்சியா) பணியில் ஈடுபடுவதால், போராட்டம் பிசுபிசுத்ததாக, கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி மாவட்டத்தில், 205 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்பட மொத்தமுள்ள, 220 சங்கங்களில், 880 பேர் பணிபுரிகின்றனர். அவர்களில், 487 பேர், வேலை நிறுத்தம் செய்வது போக, 393 பணியாளர்களை கொண்டு, பெரும்பாலான சங்கங்கள் செயல்படுகின்றன.அதேபோல் மாவட்டத்தில் உள்ள, 1,748 ரேஷன் கடைகளில், 220 சங்கத்துக்கு உட்பட்டு, 879 கடைகள் செயல்படுகின்றன. அவற்றில், 255 ரேஷன் கடைகள் மட்டும், வேலை நிறுத்தத்தால் மூடப்பட்டுள்ளன. மீதி, 624 கடைகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.இந்நிலையில், தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல கூட்டுறவு இணை பதிவாளருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் சங்க பணியாளர்களுக்கு, 'நோ வொர்க்; நோ பே' எனும் அடிப்படையில் சம்பள பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் சங்க பணியாளர்களின் விபரங்களை, பதிவாளர் அலுவலகத்துக்கு உடனே அனுப்ப வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ