போக்குவரத்துக்கு இடையூறு சாலையோர கடைகள் அகற்றம்
ஏற்காடு: ஏற்காடு, ஒண்டிக்கடை அண்ணா பூங்கா சாலை, சந்தைபேட்டை வணிக வளாகம் எதிரே உள்ள சாலையோரம், உள்ளூர் மக்கள் பலர் தள்ளுவண்டி, சிறு அளவில் டேபிள்களை வைத்து ஸ்வீட் கார்ன், பொரி கடலை, பழங்களை வைத்து வியாபாரம் செய்தனர்.விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் அதிகளவில் வரும்-போது, அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நேற்று நெடுஞ்சாலைத்துறையினர், அண்ணா பூங்கா, சந்தைப்பேட்டை, நாகலுார் சாலை ஓரங்களில், உள்ளூர் மக்கள் நடத்திய கடைகளை, அவர்களாக அப்புறப்படுத்த அறிவுறுத்-தினர். தொடர்ந்து சிலர், கடைகளை எடுத்துக்கொண்டனர். சிலர் அகற்றிக்கொள்ளாததால், அந்த கடைகளை நெடுஞ்சாலை துறை-யினர், பொக்லைன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.