உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வி.சி., ஒன்றிய செயலர் நீக்கம் புதிதாக 2 பேர் அறிவிப்பு

வி.சி., ஒன்றிய செயலர் நீக்கம் புதிதாக 2 பேர் அறிவிப்பு

ஆத்துார்: ஆத்துார் அருகே அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, 40. வி.சி., ஒன்றிய செயலராக இருந்த இவர், கடந்த, 11ல், முட்டல் ஏரி பூங்காவில் வனத்துறையினரை தாக்கியதாக புகார் எழுந்தது. இதில் அவர் மீது ஆத்துார் ஊரக போலீசார், 8 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.இதையடுத்து அக்கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் கருப்பையா, நேற்று முன்தினம் ராஜீவ் காந்தியின் ஒன்றிய செயலர் பொறுப்பை, 6 மாத காலத்துக்கு நீக்கம் செய்வதாக அறிக்கை வெளியிட்டார்.இந்நிலையில் நேற்று ஆத்துார் ஒன்றியத்தை, மேற்கு, கிழக்கு என, இரண்டாக பிரித்து, மேற்கு ஒன்றிய செயலராக வெற்றிச்செல்வன்(பொ); கிழக்கு ஒன்றிய செயலராக நல்லதம்பி(பொ) ஆகியோரை நியமித்து மாவட்ட செயலர் கருப்பையா, அறிக்கை வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !