உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளியில் மின்மாற்றி இடமாற்ற கோரிக்கை

பள்ளியில் மின்மாற்றி இடமாற்ற கோரிக்கை

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் மின்மாற்றி உள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், 'கடந்த வாரம் மின்மாற்றியில் திடீரென தீப்பற்றி, புகை வந்தது. அதனால் ஏற்பட்ட மின் தடையை, ஊழியர்கள் வந்து சரிசெய்தனர். மழை பெய்தால், மின்மாற்றி அருகே, 'ஷாக்' அடிக்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன், பள்ளி வளாகத்தில் இருந்து மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை