சிதம்பரேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடத்த கோரிக்கை
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி அருகே நத்தமேட்டில், பழமையான சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு மாசி மகம் அன்று தேரோட்டம் நடத்தப்படும். கடந்த ஆண்டு தேர் செல்லும் வீதியில் மண் சரிவு ஏற்பட்டதாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தேரோட்டத்தை நிறுத்திவிட்டனர்.இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'பல தலைமுறையாக நடந்து வந்த தேரோட்டம் நிறுத்தப்பட்டது வருத்தம் அளிக்கிறது. தேர் வீதியை சீரமைக்க தொகுதி எம்.எல்.ஏ., ராஜமுத்து நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகள், தேர் வீதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு மாசி மகம் அன்று தேரோட்டம் நடத்த, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்' என்றனர்.