உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒலிபெருக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிப்பு

ஒலிபெருக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிப்பு

சேலம், சேலம், அம்மாபேட்டையில், 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்த தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை, நேற்று, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தொடங்கி வைத்தார்.பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், அவரை சார்ந்தவர்கள், வாகன பிரசாரத்தின் போது அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது.முதியார், மாணவ, மாணவியர், இயலாதவர், உடல்நிலை சரியில்லாதவருக்கு இடையூறாக இருக்கும் என்பதால், ஒலி பெருக்கி பயன்படுத்த, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் ஒலிபெருக்கி பயன்படுத்த, உரிய அனுமதி பெற வேண்டும். இரவு, 10:00 மணிக்கு மேல் காலை, 6:00 மணி வரை ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. ஓட்டுப்பதிவு நாளுக்கு, 48 மணி நேரத்துக்கு முன்பே நிறுத்திவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ