5 மாவட்டங்களில் பணிச்சுமையால் சிரமம் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
5 மாவட்டங்களில் பணிச்சுமையால் சிரமம்வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்சேலம், அக். 30-சேலம் உள்பட, 5 மாவட்டங்களில் பணிச்சுமையால், அந்த மாவட்டங்களை, 2 ஆக பிரிக்கக்கோரி, வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமை வகித்தார்.மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி பேசியதாவது:பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதி எதையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. சென்னை, சேலம், கோவை, திருவண்ணாமலை, கும்பகோணம் மாவட்டங்களில் பணிச்சுமையால், அந்த மாவட்டங்களை, 2 ஆக பிரிக்கக்கோரி, 5 ஆண்டாக போராடுகிறாம்.அதேபோல் சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்துார் கோட்டங்களை பிரிக்க வேண்டும். மேட்டூர் தாலுகாவை பிரித்து மேச்சேரியை தலைமையிடமாக கொண்டு புது தாலுகா உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அரசு கண்டுகொள்ளவில்லை. அதனால், 2ம் கட்டமாக, தற்செயல் விடுப்பெடுத்து போராட்டம் நடத்துகிறோம். இனியும் நடவடிக்கை இல்லையெனில், வரும், 26 முதல் பணியை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து திருநெல்வேலி கலெக்டரின் ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து கோஷமிட்டனர். மாவட்ட துணைத்தலைவர்கள் பிரபு, கோவிந்தராஜ், கோபாலகிருஷ்ணன், இணை செயலர்கள் முருகபூபதி, சுமதி, சிவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தால் வருவாய்த்துறை பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.