உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலை, தெரு விளக்கு: மக்கள் எதிர்பார்ப்பு

சாலை, தெரு விளக்கு: மக்கள் எதிர்பார்ப்பு

பனமரத்துப்பட்டி:மல்லுார் டவுன் பஞ்சாயத்து, மிதுன் கார்டனில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் சேலம் -நாமக்கல் நெடுஞ்சாலையில் இருந்து, மிதுன் கார்டன் செல்லும் பாதை, மண் சாலையாக உள்ளது. மழை பெய்தால் சேறு சகதியாக மாறிவிடுகிறது. அதில் கார், இரு சக்கர வாகனங்களின் டயர்கள் சிக்கிக்கொள்வதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் மிதுன் கார்டன் செல்லும் வழியில் தெருவிளக்கு இல்லாததால், இரவில் செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.இதுகுறித்து, டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் கூறுகையில், ''தார்ச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அப்பணி தொடங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை