உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.78.73 லட்சம் மதிப்பில் சாலை பணி துவக்கம்

ரூ.78.73 லட்சம் மதிப்பில் சாலை பணி துவக்கம்

சேலம், சேலம் அம்மாபேட்டை மண்டலத்தில், ரூ.78.73 லட்சம் மதிப்பிலான தார்ச்சாலை அமைக்கும் பணியை, சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலம், 9வது வார்டில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கலைஞர் நகர் மெயின் ரோடு, குறுக்கு தெருக்கள், அழகு நகர் 2, 4 குறுக்கு தெருக்கள், அப்துல்கலாம் நகர், முத்துக்கவுண்டர் தெரு உள்ளிட்ட இடங்களில், ரூ.78.73 லட்சம் மதிப்பில், 971 மீட்டர் நீளத்துக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து 35வது வார்டில், மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்