உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காற்றில் மின் கம்பி உரசிதீப்பற்றி கூரை வீடு சேதம்

காற்றில் மின் கம்பி உரசிதீப்பற்றி கூரை வீடு சேதம்

ஆத்துார்:ஆத்துார், கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன், 54. தே.மு.தி.க., மாநில பொதுக்குழு உறுப்பினர். இவரது கூரை வீட்டின் ஒரு பகுதியில் அவரது தாய் அலமேலு தங்கியிருந்தார். மற்றொரு பகுதியில் வீட்டின் பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தனர். நேற்று மதியம், 1:00 மணிக்கு சூறைக்காற்று வீசியது. அப்போது மின் கம்பிகள், வீட்டின் கூரையில் உரசி தீப்பற்றியது. உடனே அலமேலு வெளியே வந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்து, 10 நிமிடத்தில் அங்கு சென்ற ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனால் பழைய பொருட்கள், கூரை வீட்டின் மேற்கூரை நாசமானது. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை