மேலும் செய்திகள்
'விடுங்க தோழா... பாத்துக்கலாம்!'
24-Sep-2024
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துாரில், சம்போடை வனத்தில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சமீப காலமாக மது பழக்கத்துக்கு அடிமையான பலர் வருகின்றனர். மதுரகாளியம்மனிடம் சத்தியம் செய்து, அம்மன் மடியில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை சாப்பிட்டு கையில் கயிறு கட்டி செல்கின்றனர்.அவர்களுக்கு பூஜாரி ராஜாமணி கயிறு கட்டினார். முன்னதாக அவர்கள், 'இனி மது குடிக்க மாட்டேன்' என, சுவாமி எதிரே கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்தனர். இதுகுறித்து பூஜாரி ராஜாமணி கூறுகையில், ''இங்கு சத்தியம் செய்து செல்லும் 'குடி'மகன்கள், மது குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். சிலர் கையில் உள்ள கயிற்றை அவிழ்த்துவிட்டு மீண்டும் குடிக்கின்றனர். அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர். கணவர், மகன்களை, அழைத்து வந்து பல பெண்கள் சத்தியம் செய்து செல்கின்றனர்,'' என்றார்.
24-Sep-2024