உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.200 கோடி மோசடி: உரிமையாளரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.200 கோடி மோசடி: உரிமையாளரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி நான்காயிரம் பேரிடம் ரூ.200 கோடி அளவிற்கு பணம் பெற்று மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. பணத்தை இழந்தவர்கள் உரிமையாளரை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம் ஆலம்பாளையம் என் கடையூர் பகுதியை சேர்ந்த தீபக் திலக், பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு பி.டி.எம் குரூப் ஆப் கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். சேலம், நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்து பொருட்கள் வாங்கினால் 20 மாதத்தில் முதலீடு செய்த பணத்திற்கு இரட்டிப்பாக பணம் தரப்படும் என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பிய சுமார் 4000 பேர் முதலீடு செய்தனர். அவர்களுக்கு முதல் மாதம் மட்டும் பணத்தை திருப்பி செலுத்தியுள்ளார், அதன் பின்னர் ஒரு வருடமாக பணத்தை வழங்காமல் ஏமாற்றியுள்ளார்.இதனால் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தை இழந்த மக்கள் உரிமையாளர் தீபக் திலக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டத்திற்கு வர வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு சம்மதம் தெரிவித்த தீபக் திலக், சேலம் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பணத்தை திருப்பி கேட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதற்கு சரிவர பதிலளிக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தீபக் திலக்கை தாக்க முயன்றனர். இதனையடுத்து அவர் கூட்ட அரங்கை விட்டு ஓடி வந்து அரங்குக்கு முன்பாக இருந்த சாலையில் படுத்துக்கொண்டு, 'என்னை காப்பாற்றுங்கள்' எனக் கூச்சலிட்டுள்ளார். தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் படுத்திருந்த உரிமையாளர் தீபக் திலக்கை விசாரணைக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர். அவர் சுமார் ரூ.200 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அமுதன்
மே 28, 2024 20:42

நம்பி.பணம்.படி தத்தி மக்ஜளை புடிச்சு நாலு சாத்து சாத்தணும். என்னிக்கிடா திருந்தப் போறீங்க? அடிச்ச 200 கோடியில் 2 கோடி கட்டிங் குடுத்து அவன் தப்புச்சுடுவானேடா...தத்தி மக்களா..


Dharmavaan
மே 28, 2024 19:36

எல்லாவற்றுக்கும் காரணம் நீதித்துறை கேவலம் குற்றவாளிக்கு ஆதரவு


Krishnamurthy Venkatesan
மே 28, 2024 18:03

இவர்கள் பணம் இரட்டிப்பு ஆக்கப்படும் என விளம்பரம் செய்யும்போதே போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.


venugopal s
மே 28, 2024 17:17

பண விஷயத்தில் கொங்கு மக்கள் ஏமாளிகள் என்பதை நிரூபித்து விட்டனர்! ஜூன் நான்காம் தேதி அரசியலிலும் ஏமாளிகள் என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபித்து காட்டி விடாமல் இருக்க வேண்டும்!


Sck
மே 28, 2024 16:59

இன்னும் எத்தனை வருஷம் பணத்தாசை மிகுதியால் ஏமாந்து கொண்டிருக்கும் இந்த கூட்டம்.


Ram pollachi
மே 28, 2024 15:58

அந்த நிறுவனத்தில் நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் வேலை செய்வார்கள்... நச்சு தாங்க முடியாது தொலைந்து போகட்டும் என்று முதலீடு செய்தால் மொத்தமாக காலி... பட்ட காலிலே படுது சார் என்ன செய்ய?


Selvakumar Krishna
மே 28, 2024 18:01

கொங்கு மக்கள் பேராசை பிடித்து திரிவதால்தான் இப்படி பட்ட திருடர்கள் கொழுக்கிறார்கள்


Syed ghouse basha
மே 28, 2024 15:02

ஏமாறுபவர்கள் இருகிற வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் மக்கள்தான் விழிப்போடு இருக்கனும்


Mani . V
மே 28, 2024 14:26

அதில் ஒரு கோடியை செலவு செய்தால், ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்கள். ஒன்னும் கவலைப்படாதே தீபக் திலக்.


SIVAN
மே 28, 2024 13:51

எத்தனை இது போல் ஏமாற்று சம்பவங்கள் நிகழ்ந்தாலும் மக்கள் பாடம் கற்று கொள்வதில்லை. படித்தவனுக்கும் பாமரனுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது தமிழ்நாட்டில். எருமை மேல் பெய்த மழைதான்.


Lion Drsekar
மே 28, 2024 13:34

"போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் படுத்திருந்த உரிமையாளர் தீபக் திலக்கை விசாரணைக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்." நாம் எப்போதுமே எதிர்பார்ப்பது கைது, உடனடி நடவடிக்கை, நடைமுறையில் நாம் எதிர்பார்க்கும், வேகம் இருப்பது இயலாது. சட்டத்தின் துணையுடன் ஒவ்வொரு படியாகத்தான் செல்லமுடியும் .வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை