கிணற்றில் விழுந்து மாணவர் பலி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி
மேட்டூர், சேலம் மாவட்டம் கொளத்துார், பாலமலை ஊராட்சி, பாத்திரமடுவு அடுத்த புதுகுண்டுகாட்டை சேர்ந்த விவசாயி சித்தன். இவரது மகன் பார்த்திபன், 15. இவர், அங்குள்ள ராமன்பட்டி பழங்குடியினர் உறைவிட பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். கடந்த, 30ல் நண்பர் களுடன் குளிக்க சென்ற பார்த்திபன், அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.இந்நிலையில், நேற்று மாலை அவரது வீட்டுக்கு, மேட்டூர் தாசில்தார் ரமேஷ் சென்றார். தொடர்ந்து, முதல்வர் நிதி உதவி திட்டத்தில், அவரது பெற்றோருக்கு, 3 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார். வருவாய்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.