உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பனமரத்துப்பட்டி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், மத்-திய அரசை கண்டித்து, பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை செயலர் மதன் தலைமை வகித்தார்.அதில், ஊராட்சி செயலர்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி பேசியதாவது:நுாறு நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை மாற்றக்ககூ-டாது. அத்திட்டத்தில், புது சட்ட திருத்தப்படி, 40 சதவீத நிதிச்சு-மையை, மாநில அரசுகள் மீது திணிக்க கூடாது. ஏழை மக்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கும்படி, மத்திய அரசின் சட்ட திருத்தத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கிராமங்களில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால், பட்டினி சாவு ஏற்-படும். அதனால், 100 நாள் வேலை திட்டத்தை நடைமுறையில் உள்ளபடி மாற்றம் ஏதும் செய்யாமல் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதில் ஒன்றிய கமிஷனர் பழனிசாமி உள்ளிட்ட அலுவலர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ