உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எருமை, ஆடுகளை பலி கொடுத்துபத்ரகாளி கோவிலில் கொடியேற்றம்

எருமை, ஆடுகளை பலி கொடுத்துபத்ரகாளி கோவிலில் கொடியேற்றம்

மேச்சேரி:சேலம் மாவட்டம் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் மாசி மக தேரோட்ட பெருவிழா கடந்த, 14ல் தொடங்கியது. 16ல் விநாயகர், ஆயக்கால் பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் சக்தி அழைத்தல் நடந்தது. நேற்று அதிகாலை, மூலக்கோவிலான பொங்கபாலியில் இரு ஆட்டு கிடா வெட்டி பூஜை நடந்தது. தொடர்ந்து பத்ரகாளியம்மன் கோவில் முன், இரு எருமை, இரு ஆடு வெட்டி ரத்த பலி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அர்ச்சகர்கள், மாசி மக பெருவிழா கொடியை ஏற்றினர். இதில் செயல் அலுவலர் திருநாவுக்கரசர், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை, 4:00 மணிக்கு சின்ன தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி