உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் - சென்னை விமானம் ரத்து

சேலம் - சென்னை விமானம் ரத்து

ஓமலுார், 'டிட்வா' புயலால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தபடி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து நேற்று மதியம், 3:20 மணிக்கு சேலம் வரக்கூடிய, 'இண்டிகோ' பயணியர் விமானம் கால தாமதம் ஏற்படும் என, முன்பதிவு செய்த பயணியருக்கு, காலையில் அறிவிப்பு செய்யப்பட்டு, மாலை, 5:20 மணிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணியர் எதிர்பார்த்து, சேலம் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், 3:30 மணிக்கு விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவே, பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ