உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மேயரின் மருமகள் சாவில் சந்தேகம்: உறவினர்கள் பகீர்

சேலம் மேயரின் மருமகள் சாவில் சந்தேகம்: உறவினர்கள் பகீர்

சேலம்:சேலம் மாநகராட்சி மேயராக, தி.மு.க.,வை சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளார். இவரது மகன் சுதர்சன்பாபு, 50, மருமகள் சுதா, 37. இவர்களுக்கு, 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, மகள் சவுமிதா, 13, உள்ளார்.மேயர் வீடு, சேலம் கோரிமேட்டில் உள்ளது. அதை அடுத்துள்ள சின்னகொல்லப்பட்டியில் மனைவியுடன் வசிக்கும் சுதர்சன்பாபு, கோவை நுகர்பொருள் வாணிப கிடங்கில் துணை மேலாளராக உள்ளார்.சில ஆண்டுகளாக சுதா, நீரிழிவு நோயால் அவதிப்பட்டார். அத்துடன் தம்பதி இடையே இரு ஆண்டாக பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு சுதாவுக்கு, உடல்நிலை பாதிக்கப்பட, வீடு அருகே உள்ள, புதுரான்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்றார்.மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியில் சுதா இறந்து விட்டதாக கூறினர். இதை அறிந்து மேயர் ராமச்சந்திரன், மருத்துவர்களிடம் விசாரித்து சென்றார்.ஆனால், சுதாவின் உறவினர்கள், மருத்துவமனைக்கு திரண்டு வந்து, அவசர சிகிச்சை பிரிவுக்கு முன், 'சுதா இறப்பில் சந்தேகம் உள்ளது' எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுதாவின் தம்பி பரமசிவம் உள்ளிட்ட உறவினர்கள் கூறியதாவது:நோய் காரணமாக சுதா இறக்கவில்லை. சரிவர கவனிக்காமல் பட்டினி போட்டு மேயர், அவரது மனைவி மீனாட்சி, மகன், மகள் சுமித்ரா ஆகியோர், அவரை கொன்று விட்டனர்.உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ