உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் விழுந்துஒருவர் பரிதாப பலி

கிணற்றில் விழுந்துஒருவர் பரிதாப பலி

பனமரத்துப்பட்டி: மல்லூர் அருகே, நான்குவழி சாலையில் டூ வீலரில் சென்றவர், தடுப்பு சுவர் இல்லாத கணற்றில் தவறி விழுந்து பலியானார்.சேலம், அழகாபுரம் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு கம்பெனியில், தம்மம்பட்டியை சேர்ந்த பாரதிராஜா வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை சேலத்தில் இருந்து, ஹரீஸ் என்பவருடன் டி.வி.எஸ்., பைக்கில் ராசிபுரம் நோக்கி சென்றனர். சேலம்- நாமக்கல் நான்கு வழிசாலையில், பாரப்பட்டி பிரிவு ரோடு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் இருந்து இறங்கி பாறை மீது மோதியது. அப்போது, பின்னால் உட்கார்ந்திருந்த பாரதிராஜா நிலைதடுமாறி, தடுப்பு சுவர் இல்லாத கிணற்றில் விழுந்துள்ளார்.கிணற்றில் தண்ணீர் அதிகம் இருந்ததாலும், படிகள் இல்லாததாலும் பாரதிராஜா உயிர் பிழைக்க போராடினார். மல்லூர் போலீஸார் மற்றும் அப்பகுதி மக்கள் கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து எடுத்து, பாரதிராஜாவை மீட்க முயன்றனர். அதற்குள், தண்ணீரில் தத்தளித்த பாரதிராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.சேலம், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் இருந்த பாரதிராஜா உடலை மீட்டனர். இது குறித்து, மல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை