உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வேலைஜே.எஸ்.டபில்யூ., முன் உண்ணாவிரதம்

நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வேலைஜே.எஸ்.டபில்யூ., முன் உண்ணாவிரதம்

நங்கவள்ளி: தொழிற்சாலைக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் குடும்பத்துக்கு வேலைவாய்ப்பு வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கை நிறைவேற்றக்கோரி பொட்டனேரி ஜே.எஸ்.டபில்யூ., தொழிற்சாலை முன், ஐ.ஜே.கே., (இந்திய ஜனநாயக கட்சி) உண்ணாவிரதம் இருந்தனர்.சேலம் மாவட்டம், எம்.காளிப்பட்டி, பொட்டனேரி கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயிகளிடம், 690 ஏக்கர் விவசாய நிலத்தில், சிஸ்கால் நிறுவனம், 550 ஏக்கரும், ஜின்டால் நிறுவனம், 160 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்தியது. நிலம் மற்றும் வீடு இழந்தவர்களுக்கு தொழிற்சாலையில் வேலை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.ஆனால், 45 விவசாயிகளுக்கு வேலை வழங்கவில்லை. நிலம் வழங்கிய, 45 விவசாயிகளுக்கு வேலை வழங்க வேண்டும். உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கி விட்டு, பெரும்பகுதியை ஒப்பந்ததாரர்கள் அதிக லாபம் பெறுவதை தடுக்க வேண்டும்.சுற்றுசூழல்பாதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுப்பகுதி கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை வசதி செய்ய வேண்டும். தொழிற்சாலையால் பாதித்த மக்களுக்கு இலவச மருத்துவமனை கட்டி சிகிச்சை தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை நிறைவேற்றக்கோரி பொட்டனேரி ஜே.எஸ்.டபில்யூ., இரும்பு தொழிற்சாலை முன் நேற்று ஐ.ஜே.கே., கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.இதில், கட்சியின் வர்த்த பிரிவு செயலாளர் லட்சுமணன், மாவட்ட தலைவர் வரதராஜன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சசிகுமார், மகளிர் அணி செயலாளர் அமுதா ராஜேந்திரன் உள்பட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேச்சேரி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை