உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4 பேர் அதிரடி கைதுஏற்காடு பகுதியில் பதுக்கிய387 மது பாட்டில் பறிமுதல்

4 பேர் அதிரடி கைதுஏற்காடு பகுதியில் பதுக்கிய387 மது பாட்டில் பறிமுதல்

ஏற்காடு; ஏற்காடு மலைப்பகுதியில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, 387 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் போலி மது வகைகள் விற்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பூபதிராஜன், எஸ்.ஐ.,க்கள் மணிவாசகம், உஷாராணி ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, ஏற்காடு தலைச்சோலை பகுதியில் கோவிந்தன் (43) என்பவரிடமிருந்து, 347 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, ஏற்படிகாடு பகுதியை சேர்ந்த குப்புசாமி (56), ஜெரினாகாடு பகுதியை சேர்ந்த ராமு (52) ஆகியோரிடமிருந்து தலா, 15 மதுபாட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தவிர, நாகலூர் கிராமத்தில் சிவாஜி என்பவரிடம் இருந்து, 10 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக, போலீஸார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தன், சிவாஜி உள்பட நான்கு பேரையும் கைது செய்தனர். இதில், சிவாஜி மீது போலி மது விற்பனை செய்ததாக வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை