| ADDED : ஜூலை 28, 2011 02:49 AM
ஆத்தூர்:ஆத்தூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில், புதிய ரேஷன் கார்டு, பெயர்
சேர்த்தல், நீக்குதல் குறித்து விண்ணப்பம் அளிப்பதற்கு ஏராளமான மக்கள்
குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆத்தூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில்,
ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த,
500க்கும் மேற்பட்ட மக்கள், புதிய ரேஷன் கார்டு, பெயர் சேர்த்தல், நீக்கம்
செய்தல் தொடர்பாக விண்ணப்பம் அளிப்பதற்கு நேற்று குவிந்தனர்.அப்போது, வட்ட
வழங்கல் அலுவலர்கள் காலதாமதமாக பணி மேற்கொண்டதால், ஏராளமான மக்கள் கடும்
இடநெருக்கடியில் நின்று கொண்டு அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து, வட்ட வழங்கல்
அதிகாரிகளின் அலட்சிய பணிகளை கண்டித்து, விண்ணப்பம் அளிக்க வந்த மக்கள்,
திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.ஒவ்வொரு வாரமும் ரேஷன் கார்டு
தொடர்பான மனுக்கள் பெறும் அலுவலர்கள், காலதாமதமாக பணிக்கு வருவதால்,
பொதுமக்கள் உரிய நேரத்தில் மனுக்கள் அளிக்க முடிவதில்லை. எனவே, மாவட்ட
நிர்வாகம் கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.