உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் தொடர்ந்துஇரவு நேரத்தில் மழை

சேலத்தில் தொடர்ந்துஇரவு நேரத்தில் மழை

சேலம்: சேலம் நகரில் நேற்று இரவும் பலத்த மழை பெய்ததால், குளிர் காற்று வீசியது.சேலம் நகரை சுற்றியுள்ள பகுதிகளில், தினமும் மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 8 மணிக்கு, கனத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் பணி முடிந்து வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர், டியூசன் முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவ, மாணவியர் மழைக்கு பயந்து ஒதுங்கி நின்றனர். ஒரு மணி நேரம் கழித்து மழை நின்ற பின் அனைவரும் பஸ், ஆட்டோ பிடித்துச் சென்றனர். மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் ஆங்காங்கே மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. பள்ளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இரவு 9.45 மணிக்கு மீண்டும் மழை பெய்தது. மழையால் சேலம் நகரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. சேலம் நகரை சுற்றியுள்ள பகுதியிலும் மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை