உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அதிகாரிகள் கெடுபிடிவங்கி தேர்வு எழுதமுடியாமல் திணறல்

அதிகாரிகள் கெடுபிடிவங்கி தேர்வு எழுதமுடியாமல் திணறல்

சேலம்:சேலத்தில், அகில இந்திய வங்கி தேர்வு எழுத முடியாமல், சிலர் திணறினர்.அகில இந்திய வங்கித்தேர்வு, தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு தேர்வு துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. பெரும்பாலானோர் நன்றாக படித்து விட்டு, தேர்வு எழுதுவதற்காக நேற்று, சேலம் பாரதி வித்யாலயா பள்ளிக்கு வந்தனர். ஒன்பது மணிக்கு மேல் தாமதமாக வந்த சிலரிடம், தேர்வு நடத்தும் அதிகாரிகள் கெடுபிடி செய்ததாக, மாணவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் கூறியதாவது:வங்கி தேர்வுப் பணி எழுதுவதற்காக, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, கள்ளக்குறிச்சி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் இருந்து, காலை 9 மணிக்கே வந்து விட்டோம். பள்ளியில் நுழைந்ததும், எங்களது சான்றிதழ்களை அதிகாரிகள் சரி பார்த்தனர். எங்களில் சிலர் ஒரிஜினல் ஹால் டிக்கெட் வைத்திருந்தோம். இதை பார்த்த அதிகாரிகள், ஹால் டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து வரவும்; அதன் பின், தேர்வு எழுதிக் கொள்ளலாம் என கூறினர். இதையடுத்து ஜெராக்ஸ் எடுக்கச் சென்றோம். ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால், கடைகள் பூட்டப்பட்டிருந்தன. ஒரே ஒரு கடை மட்டுமே இருந்தது; அங்கு ஜெராக்ஸ் எடுத்து விட்டு, 20 நிமிடம் தாமதமாக வந்தோம். 'தாமதமாக வந்ததால், தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம்' என, அதிகாரிகள் கூறி விட்டனர். நன்றாக படித்து வந்தும், எங்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைக்கவில்லை. காலை 9.02 மணிக்கு வந்த வாணியம்பாடியை சேர்ந்த விமல்ராஜன் என்பவரை, தாமதமாக வந்ததாக கூறி, தேர்வெழுத அனுமதிக்க வில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.தேர்வு நடந்த பள்ளி முன், போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை