ஓமலூர்:கருப்பூர் பேரூராட்சியில், அடிப்படை வசதிகள் செய்யக்கோரி, காங்கிரஸ்
கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.கருப்பூர் பேரூராட்சிக்கு
உட்பட்ட, 15 வார்டுகளிலும் குடிநீர், சாலை மற்றும் மின் வசதி, கழிவுநீர்
கால்வாய், மயான வசதி, ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுப்படுத்துதல், பொது
நூலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காங்கிரஸ் சார்பில்
உண்ணாவிரத போராட்டம் நடந்தது.கருப்பூர் பேரூராட்சி அலுவலகம் முன் நடந்த
உண்ணாவிரதத்துக்கு, காங்., மாநில பொதுச் செயலாளர் சுசீந்திரகுமார் தலைமை
வகித்தார். ஓமலூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரகுநந்தகுமார்,
கருப்பூர் நகர செயலாளர் சிவக்குமார், மேற்கு மாவட்ட எஸ்.சி., பிரிவு
துணைத்தலைவர் முருகேசன், கவுன்சிலர் ரவி ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.உண்ணாவிரதத்தில், கருப்பூர் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை
நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. கவுன்சிலர் அரவிந்த்குமார், இளைஞர் காங்.,
முருகன், ராமுவேல், பாபு, அய்யண்ணன், காசி, கோவிந்தராஜ், மகளிரணி
பங்காரும்மா, கவிதா, கண்ணம்மாள், பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.