உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கழுத்து அறுத்து பெண் கொலை

கழுத்து அறுத்து பெண் கொலை

வாழப்பாடி : வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே, கழுத்தை அறுத்து பெண்ணை கொலை செய்த வாலிபரை, வாழப்பாடி போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணியின் மனைவி மாதேஸ்வரி(45). அவருக்கு, 4 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அத்தனூர்பட்டியில் இருந்து வாழப்பாடிக்கு வந்த மாதேஸ்வரி வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள வெங்கட்டராஜ் என்பவரது நிலத்தில், கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், மாதேஸ்வரி பிணமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி., மனோகரன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீஸார், மாதேஸ்வரியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரனையில், மேற்கு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(19) என்ற வாலிபர், மாதேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்து முட்புதரில் வீசி சென்றது தெரியவந்தது. அந்த வாலிபரை பிடித்து, வாழப்பாடி போலீஸார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை