சேலம்: சேலம் மேற்கு மாவட்ட தே.மு.தி.க., செயலாளரும், மேட்டூர் தொகுதி
எம்.எல்.ஏ.,வான பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை:தே.மு.தி.க.,வின் 7ம்
ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் வரும் 25ல், கோவையில் நடக்கிறது. இது
தொடர்பான இளைஞரணி ஆயத்த பொதுக்கூட்டம், சேலம் மாவட்டத்தில் பல்வேறு
இடங்களில் நாளை நடக்கிறது. இதில், மாநில இளைஞரணி துணை செயலாளரும்,
எம்.எல்.ஏ.,வுமான நல்லதம்பி பேசுகிறார். அவர், சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்
இடம் மற்றும் நேர விபரங்கள் வருமாறு:சேலம் ஒன்றியம்- காலை 10 மணி,
வீரபாண்டி ஒன்றியம்- காலை 10.30 மணி, மகுடஞ்சாவடி ஒன்றியம்- காலை 11 மணி,
சங்ககிரி ஒன்றியம்- 11.30 மணி, கொங்கணாபுரம் ஒன்றியம்-பகல் 12
மணி.இடைப்பாடி நகரம்-12.30 மணி, இடைப்பாடி ஒன்றியம்- பகல் 1 மணி, நங்கவள்ளி
ஒன்றியம்-1.30 மணி, மேட்டூர் நகரம்- பிற்பகல் 2 மணி, கொளத்தூர்
ஒன்றியம்-பிற்பகல் 3 மணி, மேச்சேரி ஒன்றியம்- மாலை 3.30 மணி, தாரமங்கலம்
ஒன்றியம்- மாலை 4 மணி, ஓமலூர் ஒன்றியம்- மாலை 4.30 மணி, காடையாம்பட்டி
ஒன்றியம்-மாலை 5 மணி.இந்த கூட்டத்தில், தே.மு.தி.க., மாவட்ட, மாநகரம்,
நகரம், ஒன்றியம், பேரூர் கிளை நிர்வாகிகள், பல்வேறு பொறுப்பாளர்கள் திரளாக
கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.