உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீரபாண்டி ஒன்றியத்தில்வேட்பு மனு தாக்கல்

வீரபாண்டி ஒன்றியத்தில்வேட்பு மனு தாக்கல்

ஆட்டையாம்பட்டி: வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில், தேர்தலில் போட்டியிட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் 22ம் தேதி துவங்கியது. நான்கு நாட்களாக சூடு பிடிக்காத கட்சிகள், நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது. இதுவரை ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 49 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டுக்கு நான்கு பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 99 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 375 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.ஒன்றிய ஆணையாளர் சுந்தரராஜன், தனித்துணை கலெக்டர் நூர்முகம்மது ஆகியோர் மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !