உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் சிலவரி செய்திகள்

சேலம் சிலவரி செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கியடிரைவர் மீது போக்சோசங்ககிரி: சங்ககிரி அருகே, 16 வயது சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி செல்லும் போது, திருச்செங்கோடு தாலுகா, தண்ணீர் பந்தல் பாளையத்தை சேர்ந்த கோபிநாத், 22, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. லாரி டிரைவரான கோபிநாத், சிறுமியிடம் கடந்தாண்டு அக்., 3ல், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி வயிற்று வலி என கூறியதையடுத்து, அவரது தாயார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், சிறுமி ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, சிறுமியின் தாயார் அளித்த புகார்படி, சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, கோபிநாத் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.பூங்கா, பவளவிழா கோபுரத்தில்11 தேன் கூடுகள் நீரால் அழிப்புமேட்டூர்-மேட்டூர் அணை பூங்கா, பவளவிழா கோபுரத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த, 11 தேன் கூடுகள் நீரை பீய்ச்சியடித்து அணைக்கப்பட்டது.மேட்டூர் அணை பூங்கா மரங்கள் மற்றும் வலதுகரை பகுதியில் உள்ள, 75 அடி உயர பவளவிழா கோபுர உச்சியில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. தற்போது கோடை விடுமுறை என்பதால் அணை பூங்கா, கோபுரத்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அந்த பயணிகளுக்கு மரம், கோபுரத்தில் இருந்த தேனீக்கள் இடையூறாக இருந்துள்ளது. அணை செயற்பொறியாளர் தகவல்படி நேற்று முன்தினம் மாலை பூங்காவில் மரங்களில் இருந்த, 7 தேன்கூடுகளை மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழுவினர் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு அணை பவளவிழா கோபுரத்துக்கு சென்ற தீயணைப்பு குழுவினர் உச்சியில் தேனீக்கள் கட்டியிருந்த, 4 கூடுகளை, 70 அடி உயரம் நீரை பீய்ச்சியடித்து அழித்தனர். சிறுமிக்கு பாலியல்தொல்லை: வாலிபர் கைது சேலம்: சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த அர்த்தநாரி மகன் ரஞ்சித்குமார், 26. இவர் கடந்த, 29ல் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளையில், எலக்ட்ரீஷியன் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த, 6 வயது சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே தாயிடம் தெரிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் ரஞ்சித்குமாருக்கு தர்ம அடி கொடுத்து, அம்மாபேட்டை மகளிர் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, நேற்று போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்