சந்து கடைகளில் ரெய்டுசேலத்தில் 17 பேர் கைதுசேலம்: சேலம் சந்துக்கடைகளில் நடந்த ரெய்டில், 7 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.சேலம் மாநகர பகுதிகளில், டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை வாங்கி, பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை பிடிக்க, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அந்தந்த போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.இதில் அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, காரிப்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 7 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.நடத்துனருக்கு திடீர் வலிப்புபஸ் சாலையோரம் நிறுத்தம்மேட்டூர்: அரசு பஸ் நடத்துனருக்கு வலிப்பு ஏற்பட்டதால், பஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டது.மேட்டூரில் இருந்து நேற்று மதியம், 12:50 மணிக்கு கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரன் மலைக்கு தமிழக அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவர் சந்திரசேகரன் ஓட்டினார். கரிகாலன்திட்டு பகுதியை சேர்ந்த நடத்துனர் மோகன்குமார் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தார்.பஸ் மேட்டூர் மின்வாரிய பணிமனை சாலையை கடந்து செல்லும் போது, நடத்துனருக்கு வலிப்பு ஏற்பட்டது. பயணிகள் கூச்சலிட்டதால், பணிமனை அருகே பஸ் நிறுத்தப்பட்டது. உடனடியாக டிரைவர் சந்திரசேகரன் பஸ்சை நிறுத்தி விட்டு, நடத்துனரை மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நலம் சற்று தேறியது.பின்னர், பஸ்சுக்கு மாற்று நடத்துனராக ராஜலிங்கம் என்பவர் சென்றார். அரை மணி நேரம் தாமதமாக மாதேஸ்வரன் மலைக்கு பஸ் சென்றது.