உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சருகு மான் வேட்டை: துப்பாக்கியுடன் வாலிபர் கைது

சருகு மான் வேட்டை: துப்பாக்கியுடன் வாலிபர் கைது

ஆத்துார் : சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர், ஜடையகவுண்டன் காப்புக்காடு வனப்பகுதியில் ஆத்துார் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர், நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் சிறுவாச்சூர் ஊராட்சி எலந்தவாரி மலை கிராமத்தை சேர்ந்த கார்த்தி, 19, என்பதும், அதே பகுதியை சேர்ந்த மேலும், 2 பேருடன், மான் வேட்டைக்கு வந்ததும் தெரிந்தது. கார்த்தியிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட சருகு மானை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவரை கைது செய்து மேலும் இருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை