உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2வது கணவர் கம்பியால் அடித்து கொலை முதல் கணவரின் போதை மகன் கைது

2வது கணவர் கம்பியால் அடித்து கொலை முதல் கணவரின் போதை மகன் கைது

ஓமலுார், தாயை தாக்கிய தொழிலாளியை, கம்பியால் அடித்து கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம், கடலையூரை சேர்ந்த பால்சாமி, 63, மனநலம் பாதிக்கப்பட்ட தனது முதல் மனைவியை பிரிந்து, இரண்டாவது மனைவி செல்வராணி, 60, என்பவருடன் கடந்த, 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். செல்வராணி தனது முதல் கணவரை பிரிந்தவர். செல்வராணிக்கு மனோகர்,30, என்ற மகன் உள்ளார். பால்சாமி, செல்வராணி, மனோகர் ஆகிய மூவரும், சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே உள்ள பல்பாக்கி கிராமத்தில் தங்கியுள்ளனர். பால்சாமி, செல்வராணி ஆகியோர், சேகர்,40, நடத்தி வரும் தீக்குச்சி கம்பெனியில், கடந்த, 5 மாதங்களாக வேலை செய்து வந்தனர். மனோகரன் அருகில் உள்ள, மரம் அறுக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் செல்வராணி, பால்சாமி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், செல்வராணியை பால்சாமி தாக்கியுள்ளார். இதையறிந்த செல்வராணி மகன் மனோகர், மது போதையில், பால்சாமியிடம் தகராறு செய்து, கம்பியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பால்சாமி தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.ஓமலுார் போலீசார், மனோகரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்