உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதுநிலை பட்டப்படிப்புக்கு சேலத்தில் பதிவு செய்ய வசதி

முதுநிலை பட்டப்படிப்புக்கு சேலத்தில் பதிவு செய்ய வசதி

சேலம்: முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள், சென்னை தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த முறை மாற்றப்பட்டு, சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் பெருமாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதுநிலை பட்டப்படிப்பு, பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., சி.ஏ., பி.எல்., போன்ற தொழில் முறை படிப்புகளை பதிவு செய்யவும், ஏற்கனவே பதிவு செய்து கொண்ட பதிவை புதுப்பிக்க, பதிவு விபரங்களை கூடுதலாக பதிவு செய்ய சென்னை மற்றும் மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த முறை மாற்றியமைக்கப்பட்டு, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலை பட்டிப்படிப்புக்கான பதிவை செய்து கொள்ளலாம். பதிவுதாரர்களுக்கு உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும்.

இன்டர்நெட் மூலமாக http://mvelaivaippu.gov.in/empower/ என்ற இணைய முகவரிக்கு சென்று பணிகளை பதிவுதாரர் அளவில் முடித்துக் கொள்ளலாம். புதிதாக பதிவு செய்பவர்கள் 'யூசர் ஐடி' பதிவு செய்து, பதிவு விபரங்களை உள்ளீடு செய்து பதிவெண்ணுடன் கூடிய அடையாள அட்டையை பெறலாம். அவர்களுக்கு பதிவெண் வழங்கும் வரை அவர்ளால் உருவாக்கப்பட்ட 'யூசர் ஐடி'யை பயன்படுத்தலாம். பழைய பதிவுதாரர்கள் தங்களது 'யூசர் ஐடி' பதிவெண்ணையும் தங்களது பிறந்த தேதியை கடவுச் சொல்லாக (பாஸ்வேர்ட்) பதிவு செய்து, புதுப்பித்தல், கூடுதல் விபரங்களை சேர்த்தல், முகவரி மாற்றம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இந்த வாய்ப்பை சேலம் மாவட்டத்தை சேர்ந்த முதுநிலை பட்டபடிப்புதாரர்கள் பயன்படுத்தி கொள்ளாலம். இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி கூட்ட துளிகள்

* கடந்த நான்கரை ஆண்டுகள் கழித்து, முதல் முறையாக மாநகராட்சி ஆணையாளர் இல்லாமல் நேற்று மன்ற கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர்(பொறுப்பு) அசோகன், கூட்டத்தில் பங்கேற்றார்.

* தி.மு.க., மண்டல குழு தலைவர்கள் நடேசன், மோகன், சரவணன் உள்ளிட்ட பெரும்பாலான தி.மு.க., கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

* இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்குற்றவாளியாக அறிவித்ததற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கொறடா பாலசுப்ரமணி, பாராட்டு தீர்மானம் வாசித்தார்.

* கடந்த முறை சர்ச்சை ஏற்பட்டதால், போலீஸ் புகைப்படக்காரர்கள், மன்ற கூட்டம் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.

*கவுன்சிலர்கள் வராததால், இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை