உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறை இல்லவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கல்

சிறை இல்லவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கல்

சேலம்: பெத்தேல்-வேர்ல்டு விஷன் சார்பில், சிறை இல்லவாசிகள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு, கல்வி உதவித்தொகை மற்றும் குடும்ப வருமான உதவி வழங்கப்பட்டது. சேலம், ஒய்எம்சிஏ ஹாலில் நடந்த விழாவில், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஐசக் வரவேற்றார். வேர்ல்டு விஷன் இந்தியா மேலாளர் சாந்தி எபிநேசர், சேலம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செங்கோட்டையன், சேலம் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் அன்பழகன் மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவில், சிறை இல்ல வாசிகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சைக்கிள், கல்லூரி புத்தகம், தையல் மிஷின், கறவை மாடு வாங்க உதவி, கல்லூரி கட்டணம், பள்ளி கட்டணம் என மொத்தம் 22 பேருக்கு, ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.சேலம் நன்னடத்தை அலுவலர் சகாய ஆல்பர்ட் விக்டர், மண்டல நன்னடத்தை அலுவலர் ராமலிங்கம், கல்வராயன் மலை வட்டார திட்ட மேலாளர் காமாட்சி உள்பட கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ