சாரணர்களுக்கான விருதுக்கு தேர்வு முகாம்
சேலம், சேலம் ஊரக சாரண மாவட்டத்தின் சார்பில், ஓமலுார் பஞ்சு காளிப்பட்டி சவுத் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மூன்று நாட்களாக சாரண, சாரணியர்களுக்கான மாநில விருதுக்கு தேர்வு முகாம் நடைபெற்றது.அதில் அரசு பள்ளிகள் உட்பட, 12 பள்ளிகளில் இருந்து, 150 சாரண, சாரணியர் கலந்து கொண்டனர். தேர்வு முகாம் தொடக்கத்தில், மாவட்ட தலைவர் பாலதண்டாயுதம் சாரண கொடியேற்றினார், பள்ளி தாளாளர் சௌந்திரராஜன் தேர்வை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் பிருத்திவிராஜன் மற்றும் சாரண ஆசிரியர் இராஜசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேர்வாளர்களான நாமக்கல் மாவட்டம் விஜய் மற்றும் வால்பாறை ரூத்பேபி ஆகியோர், சாரண சாரணியர்களின் திறமைகளை பரிசோதனை செய்தனர். முகாமில் கயிற்று கலை, முதலுதவி, கூடாரம் அமைத்தல், உடற்பயிற்சி மற்றும் எழுத்துத் தேர்வு போன்ற பல்வேறு தலைப்புகளில் பரிசோதனை நடைபெற்றது. தேர்வு முகாமை ஊரக மாவட்ட செயலாளர் முனைவர் சரவணன் சிறப்பாக செய்திருந்தார். சாரண ஆசிரியர் ஜான் பிரிட்டோ நன்றி கூறினார்.