பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவராக மீண்டும் சண்முகநாதன் தேர்வு
வாழப்பாடி: பா.ஜ.,வின், சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக, வாழப்பா-டியை சேர்ந்த வக்கீல் சண்முகநாதன், 3 ஆண்டுகளாக இருந்தார். அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில், கடந்த, 5ல் மாவட்ட தலைவர் பதவி தேர்தல் நடந்தது. 21 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் மின்னாம்பள்ளியில், கிழக்கு மாவட்ட தலைவர் அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாநில செயலர் வினோஜ் செல்வம், சேலம் கிழக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி முத்துக்-குமார், மீண்டும் சண்முகநாதனை, கிழக்கு மாவட்ட தலைவராக அறிவித்தனர். இதையடுத்து சண்முகநாதனுக்கு, மாலை, சால்வை அணிவித்து, பட்டாசு வெடித்தும், வீரவாள் வழங்கியும், கட்சியினர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர். தொடர்ந்து, வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் முதல், எழில் நகரில் உள்ள, சண்முக-நாதன் வீடு வரை, பேரணியாக சென்றனர். மாவட்ட முன்னாள் தலைவர்கள் மணிகண்டன், ஜெயஆனந்த், மாணிக்கம், பொதுச்-செயலர் ராமச்சந்திரன், இளைஞரணி தலைவர் குணசேகரன் உள்-பட பலர் பங்கேற்றனர்.