உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கடைகள், சுங்க வசூல் ஏலம் ரூ.25 லட்சம் வருவாய்

கடைகள், சுங்க வசூல் ஏலம் ரூ.25 லட்சம் வருவாய்

தாரமங்கலம்,தாரமங்கலம் கைலாச நாதர் கோவிலில் தற்காலிக கடைகள் வாடகை உரிமை பொது ஏலம், வாகனம் நிறுத்துவதற்கான கட்டண வசூல் ஏலம், கோவில் முன் நேற்று நடந்தது.ராஜகோபுரம் முன் பூஜை பொருட்களை விற்பதற்கான, 6 கடைகள் ஏலத்தில், 7.07 லட்சம் ரூபாய்க்கு, 4 கடைகள் ஏலம்போனது. 2 கடைகளை யாரும் கேட்காததால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து சூரமங்கலம் சாலையில், 10 தற்காலிக கடைகளை, 11.53 லட்சம் ரூபாய்க்கு, ஏலதாரர்கள் எடுத்தனர். அதேபோல் கோவில் முன் வாகன பாதுகாப்பு சுங்க வசூலை, 4.99 லட்சம் ரூபாய்க்கு எடுத்தனர்.தற்காலிக கடைகள் வைப்புத்தொகை, 1.40 லட்சம் ரூபாயுடன் சேர்த்து, 3 வித உரிம இனங்கள் ஏலம், 25.08 லட்சம் ரூபாய், கோவிலுக்கு வருவாய் கிடைத்தது. கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், சரக ஆய்வாளர் கதிரேசன், தக்கார் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை