உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் விழுந்த பசுவை மீட்டுக்கொடுத்த வீரர்கள்

கிணற்றில் விழுந்த பசுவை மீட்டுக்கொடுத்த வீரர்கள்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, கடம்பூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 40. இவரசு பசு மாடு நேற்று காலை, 9:20 மணிக்கு விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு, காலை, 9:35 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 5 நிமிடத்தில் அங்கு வந்த வீரர்கள், கிணற்றில் விழுந்த பசு மாட்டை, ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். மாட்டு பொங்கலன்று கிணற்றில் விழுந்த பசு மாட்டை மீட்டுக்கொடுத்த தீயணைப்பு வீரர்களுக்கு, ரஞ்சித்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி