மேலும் செய்திகள்
முன்விரோதத்தில் வாலிபர் கொலை;6 பேர் அதிரடி கைது
17-Dec-2024
சங்ககிரி: தை பொங்கலையொட்டி, சங்ககிரி போலீஸ் பாஸ்கிளப் சார்பில், சிறுவர், சிறுமியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள், போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமை வகித்து, சிறுவர், சிறுமியருக்கு போட்டிகளை தொடங்கி வைத்தார். இசை நாற்காலி, கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், சிறு கரண்டியில் எலுமிச்சம்பழத்தை வாயில் பிடித்தபடி ஓடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சி எஸ்.ஐ., விஜயராகவன் பரிசுகளை வழங்கினார். போலீசார், மனமகிழ் மன்ற பயிற்சியாளர் மணிகண்டன், விளையாட்டு சாதன பராமரிப்பாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
17-Dec-2024