உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மர்மவிலங்கு கடித்து புள்ளிமான் பலி

மர்மவிலங்கு கடித்து புள்ளிமான் பலி

மர்மவிலங்கு கடித்துபுள்ளிமான் பலிமேட்டூர், செப். 28-கொளத்துார் அருகே, மர்ம விலங்கு கடித்து புள்ளிமான் உயிரிழந்தது.கொளத்துார் டவுன் பஞ்., 15வது வார்டு, சின்னமேட்டூர் பாலமலை அடிவாரத்தில் உள்ளது. நேற்று அதிகாலை பாலமலையில் இருந்து, குடிநீர் தேடி பெண் புள்ளிமான் ஒன்று சின்னமேட்டூர் பகுதிக்கு வந்தது. அப்போது, மர்ம விலங்கு துரத்தி புள்ளிமான் உடல் பகுதியை கடித்து கொன்றது. புள்ளிமானை கைப்பற்றிய வனத்துறையினர், அதனை கடித்த மர்மவிலங்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி