மாநில அளவில் கலைத்திருவிழா நாளை தொடக்கம்
சேலம், தமிழக பள்ளி மாணவ, மாணவியருக்கு, தனித்திறன்களை வளர்க்க, ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள், மாவட்ட, மாநில அளவில் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு, மாவட்ட கலைத்திருவிழா போட்டி நடத்தப்பட்ட நிலையில், அவற்றில் முதல் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, மாநில கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.அதில், 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி, சேலம் பத்மவாணி கல்லுாரியில், நாளையும், நாளை மறுநாளும் நடக்க உள்ளது. இதில் ஓவியம் வரைதல், ரங்கோலி, பானை ஓவியம், களிமண் சிற்பம், மணல் சிற்பம் உள்பட, 34 வகை போட்டிகளில், 1,675 மாணவர்கள், 3,463 மாணவியர் என, 5,138 பேர், தமிழகம் முழுதும் இருந்து பங்கேற்க உள்ளனர்.