மேலும் செய்திகள்
மாவட்ட கேரம் 643 பேர் பங்கேற்பு
02-May-2025
ஓமலுார் :ஓமலுாரில் உள்ள, சேலம் மாவட்ட சாப்ட் டென்னிஸ் அகாடமியில், 16வது சீனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இப்போட்டியில், சேலம், மதுரை, திருச்சி, வேலுார், விழுப்புரம் உள்பட, 22 மாவட்டங்களில் இருந்து, 303 வீரர், வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர், குழு போட்டி ஆகியவை நடக்கிறது. அதிக வீரர்கள் பங்கேற்பால், இரும்பாலை அருகே உள்ள சாப்ட் டென்னிஸ் மைதானத்திலும் போட்டிகள் நடக்கின்றன. இன்று இறுதிப்போட்டி, பரிசளிப்பு விழா, ஓமலுாரில் உள்ள மைதானத்தில் நடக்கிறது.
02-May-2025